நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13ஆவது மலேசியத் திட்டம்; சமூக, பொருளாதார இடைவெளியைக் குறைக்கும்: பிரதமர்

புத்ராஜெயா:

13ஆவது மலேசியத் திட்டம் சமூக, பொருளாதார இடைவெளியைக் குறைக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தற்போதைய பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளுக்கு 13ஆவது மலேசியா திட்டம் 2026-2030  முதுகெலும்பாக இருக்க வேண்டும்.

மேம்பாடு,  வருமான ஏற்றத்தாழ்வுகள், வரையறுக்கப்பட்ட நிதி இடம்,  மெதுவான பொருளாதார கட்டமைப்பு மாற்றம் ஆகியவை வலியுறுத்தப்பட வேண்டிய சவால்கள் இதில் அடங்கும்.

உலகளாவிய பொருளாதார அபாயங்கள்,  நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதில் நாடு மிகவும் மீள்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் கட்டமைப்பு மாற்றத்தை துரிதப்படுத்தவும் சமூக, பொருளாதார வளர்ச்சி இடைவெளியைக் குறைக்கவும் வேண்டும்.

முன்னதாக, வரவிருக்கும் மக்களவை அமர்வில் தாக்கல் செய்யப்பட உள்ள 13ஆவது மலேசியத் திட்டம்  ஆவணத்தைத் தயாரிப்பது குறித்து மூத்த அரசு அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.

மடானி பொருளாதார நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முக்கிய கொள்கை  இந்த ஆவணங்களில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset