நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

17.5 மில்லியன் பயணிகள் சாங்கி நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்

சிங்கப்பூர்:

இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை சுமார் 17.5 மில்லியன் பயணிகளைச் சாங்கி விமான நிலையம் கையாண்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பதிவான பயணிகள் எண்ணிக்கையை விட இது 5.9 விழுக்காடு அதிகம் என்று 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு புள்ளிவிவரம் காட்டுகிறது.

மேலும், இந்த எண்ணிக்கை கோவிட்-19 கிருமி தொற்றுக்கு முன் 2019-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவான பயணிகள் எண்ணிக்கையை விட அது 4 விழுக்காடு அதிகமாகும். 

சாங்கி விமான நிலையக் குழுமம் இன்று அண்மைய புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

ஏப்ரலில் மட்டும் சாங்கி விமான நிலையத்தை 5.78 மில்லியன் பயணிகள் கடந்துசென்றனர்.

மே மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 5.82 மில்லியனாகவும் ஜூன் மாதத்தில் அது 5.88 மில்லியனாகவும் பதிவானது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சீனாவிலிருந்தே அதிகமான பயணிகள் விமான நிலையத்தைக் கடந்தனர்.

இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் இடம்பெற்றுள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset