நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வியட்நாமை தாக்கிய விபா புயல்: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம் 

ஹோ சிமின் சிட்டி:

வியட்நாமின் வடக்கு, மத்திய பகுதிகளில் விபா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வியட்நாமில் விபா புயல் இன்று (ஜூலை 22) காலை 11 மணியளவில் 64-102 கிலோ மீட்டர் (40-63 மைல்) வேகத்தில் காற்றுடன் கரையைக் கடந்தது. மேலும் மணிக்கு 138 கிமீ(86 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக உள்ளூர் வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

விபா புயல் ஒரே இரவில் பலவீனமடைந்துள்ளது. இருப்பினும்  ஹனோயின் கிழக்கே உள்ள ஹங் யென் மாகாணத்தின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக தலைநகர் ஹனோயின் வீதிகள் வெறிச்சோடியது. 

வடக்கு வியட்நாமில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, துறைமுக நகரமான ஹை போங் மற்றும் குவாங் நின் மாகாணத்தில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 150,000 ஹெக்டேர் (370,000 ஏக்கர்) மீன் வளர்ப்பு பண்ணைகள், 20,000-க்கும் மேற்பட்ட மிதக்கும் மீன் கூண்டுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Typhoon Wipha whips Vietnam as Philippines flooding displaces thousands

விபா புயல் கனமழை உள்நாட்டிற்குள் நகர்வதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பிலிப்பின்ஸில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசரகால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் மற்றும் 10 மாகாணங்களில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இன்று மூடப்பட்டன, 

விபா புயலுக்கு இதுவரை மூன்று பேர் உயிரிழந்தனர். தாழ்வான இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் தண்ணீரில் மூழ்கிய கிராமங்களில் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset