நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வில்லியம், ஹாரி இளவரசர்களின் உறவினர் மர்மமாக உயிரிழப்பு

லண்டன்:

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியின் உறவாகிய ரோஸி ரோச் (வயது 20) துப்பாக்கியுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

ஜூலை 14ம் தேதி, அவரது குடும்ப வீட்டான வில்ட்ஷயரில் உள்ள நார்டன் பகுதியில், அவர் உயிரிழந்த நிலையில் அம்மா மற்றும் சகோதரி கண்டனர். அதற்குமுன், அவர் தனது நண்பர்களுடன் விடுமுறைக்காக பயணத்திற்கு தயாராக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திடீரென நிகழ்ந்த இந்த மரணத்திற்கு, வில்ட்ஷையர் மற்றும் ஸ்வின்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

"போலீசார் இது சந்தேகத்துக்கிடமான மரணம் அல்ல என்றும், இதில் மூன்றாவது தரப்பு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்."

ரோஸி ரோச், டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பு பயின்று வந்த மாணவி ஆவார். அவரது மரணம் குறித்து மாகாண செய்தி நிறுவனமான Yorkshire Post மற்றும் The Times ஆகியவற்றில் மரண அறிவித்தல் வெளியிடப்பட்டது.

ரோஸி, பிரின்சஸ் டயானாவின் மாமாவின் பேரனாகிய (எட்மண்ட்) ஹ்யூ பெர்க் ரோச் (53) மற்றும் பில்லிபா கேட் விக்டோரியா லாங் ஆகியோரின் மூத்த மகள். இவர் பெர்மாய் பாரன்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். குறிப்பிடத்தக்க விஷயம் – அவரது தாத்தா, ஐந்தாவது பெர்மாய் பாரன், 1984ல் தானே தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம், கடந்த பிப்ரவரியில் லேடி கப்ரியெல்லா விண்சரின் கணவர் தோமஸ் கிங்ஸ்டனின் தற்கொலை சம்பவத்தை நினைவூட்டுகிறது. அவர் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் கொண்டிருந்த நிலையில், மருந்துகளின் தாக்கத்தில் தானே உயிரை மாய்த்துக் கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset