நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யாவில் பேருந்து விபத்து: 13 பேர் மரணம்

யகுதியா:

ரஷியாவின் கிழக்கே யகுதியா பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் சிலரை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 82 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.

இந்த விபத்து, டெனிசோவ்ஸ்கி சுரங்கம் மற்றும் பதப்படுத்தும் ஆலை அமைந்த சாலையில் நடந்துள்ளது.

இந்த ஆலையில் நிலக்கரி பதப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன என விசாரணை அதிகாரிகள் சுட்டி காட்டுகின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset