நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மகனால் உருமாற்றம் கண்ட தாய்

லண்டன்:

மகனுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதும் உணவுக்கு அடிமையாகி இருந்த ஒரு தாய், தற்போது 108 கிலோ குறைத்து, தன்னை மாற்றிய தருணத்தை பகிர்ந்துள்ளார்.

பிரிட்டனில் வசிக்கும் ராசல் பாஷ்லி, ஒரு காலத்தில்க 196 கிலோ எடையுடன் இருந்தார். இப்போது உடல் எடையை குறைந்தது குறித்து சமூக ஊடகத்தில் பேசியுள்ளார்.

தாம் கொஞ்சம் 'curvy' தான் இருந்ததாகவும் தன்னுடைய மகன் ஜென்சனுக்கு நியூரோபிளாஸ்டோமா என்ற புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு,  கட்டுப்பாடில்லாமல் உணவுக்கு அடிமையாய் போய்விட்டதாக கூறினார்,

இதனிடையே ஜென்சன் இப்போது 12 வயதானாலும், அவர் சிறுவயதில் இருந்தே நேர் நரம்புகளை தாக்கும் இந்த அபூர்வ புற்றுநோயுடன் போராடி வருகிறார். UKயில் ஆண்டிற்கு 100 குழந்தைகள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த நேரத்தில், அவர் வீட்டு சமையலுக்கு நேரம் இல்லாமல், வாரத்திற்கு £100 (சுமார் RM600) செலவழித்து ஆறு நாட்கள் வெளி உணவுகள் உண்டு வந்தார்.

“மிகவும் மோசமான காலம். 18 மாதங்கள் முழுக்க மருத்துவமனையில் இருந்தேன். தினமும் ஒரு குடும்ப அளவுள்ள சாக்லேட், பிரேக்‌பாஸ்டுக்கு 'புல் இங்கிலிஷ்', மத்தியானம் கூல்ரிங், சாக்லேட், கிரிஸ்ப்ஸ்... சமைப்பதேயில்லை.”

“டொமினோஸ் டெலிவரி டிரைவர் எங்களைப் பற்றி தெரிந்து விட்டார்.”

இதன் தாக்கததை அறிந்ததால் இப்போது தம்மை முழுமையுமாக மாற்றி மற்ற தாய்மார்களுக்கு ராசல் பாஷ்லி எடுத்து காட்டாக மாறியுள்ளார். சமூக ஊடகத்தில் பலர் அவரது படத்தை பகிர்ந்து வருகின்றார்கள்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset