நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சுவிஸ் சாக்லெட்டை உலகில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்: YouGov நிறுவனம்

லண்டன்:

சுவிஸ் சாக்லெட்டை உலகில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி உண்ணும் சாக்லெட்டாக இருப்பதாக YouGov நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிஸ் சாக்லெட்டை 39 விழுக்காட்டினர் விரும்பு உண்ணுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பெல்ஜிய சாக்லெட்டை 28 விழுக்காட்டினரும் பிரிட்டிஸ் - இத்தாலிய சாக்லெட்டை 13 விழுக்காட்டினரும் விரும்பி உண்ணுவதாக ஆய்வு காட்டுகிறது.

இந்த ஆய்வில் 17 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் பெரும்பாலோர் டார்க் சாக்லெட்டையும் மில்க் சாக்லெட்டையும் அதிகம் விரும்புகின்றனர்.

சிலர் சர்க்கரையின் அளவு, ஆரோக்கிய பலன்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சாக்லெட்டைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

நிறுவனத்தின் நன்மதிப்பு, நெருங்கியவர்களின் பரிந்துரை ஆகியவை வேறு சிலரின் தெரிவுகளை மாற்றுகின்றன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset