
செய்திகள் உலகம்
அமெரிக்காவில் பயணிகள் விமானம், ராணுவ விமானம் மோதும் அபாயம்: அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பயணிகள் விமானம், ராணுவ விமானம் மோதும் அபாயம் தவிர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
அமெரிக்காவில் விமானி ஒருவர் அவரது பயணிகளைப் பதறவைக்கும் தருணத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த சம்பவம் ஜூலை 18ஆம் நடந்ததாக ஸ்கை வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டது.
மின்னியெப்போலிஸ் - செயிண்ட் பாலிலிருந்து வட டகோட்டாவில் உள்ள மினோட் அனைத்துலக விமான நிலையத்திற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.
அப்போது விமானத்தின் வலது புறமாகத் திடீரென்று ராணுவ விமானம் ஒன்று மிக அருகில் பறந்துகொண்டிருந்தது.
அதனோடு மோதுவதைத் தவிர்க்க விமானி மிக வேகமாக விமானத்தைத் திருப்பவேண்டிய நிலை ஏற்பட்டது.
சம்பவத்தின் காணொளி சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்டுப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் குறித்துப் பயணிகளிடம் விமானி விளக்கம் தருவதைக் கேட்கமுடிகிறது.
ராணுவ விமானம் மிக அருகில் பறந்துகொண்டிருக்கும் தகவலை விமானக் கட்டுபாட்டு நிலையம் முன்னதாகவே தெரிவிக்கவில்லை என்று விமானி கூறினார்.
அதனால் அதனைக் கண்டதும் விமானத்தை விரைவாகத் திருப்புவதைத் தவிர வேறு வழியில்லை எனப் பயணிகளிடம் அவர் எடுத்துக்கூறினார்.
பயணிகள் அச்சம்பவத்தால் பெரும் பீதிக்குள்ளாகினர் என்பதைக் காணொளியில் காணமுடிந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2025, 6:44 pm
சிங்கப்பூரின் முக்கிய தகவல் உள்கட்டமைப்பு மீது இணையத் தாக்குதல்: தற்காப்பு அமைச்சர் சான்
July 22, 2025, 6:25 pm
வியட்நாமை தாக்கிய விபா புயல்: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்
July 22, 2025, 4:56 pm
சுவிஸ் சாக்லெட்டை உலகில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்: YouGov நிறுவனம்
July 22, 2025, 4:20 pm
ரஷ்யாவில் பேருந்து விபத்து: 13 பேர் மரணம்
July 22, 2025, 3:54 pm
17.5 மில்லியன் பயணிகள் சாங்கி நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்
July 22, 2025, 3:42 pm
மகனால் உருமாற்றம் கண்ட தாய்
July 22, 2025, 3:32 pm
வில்லியம், ஹாரி இளவரசர்களின் உறவினர் மர்மமாக உயிரிழப்பு
July 22, 2025, 3:15 pm
வங்கதேச விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு
July 22, 2025, 1:01 pm