செய்திகள் மலேசியா
நெடுஞ்சாலை கட்டுமான நிதி மோசடி: டான்ஸ்ரீயிடமிருந்து எம்ஏசிசி வாக்குமூலம் பெற்றது
கோலாலம்பூர்:
நெடுஞ்சாலை கட்டுமான நிதி மோசடி தொடர்பிலான டான்ஸ்ரீயிடமிருந்து எம்ஏசிசி வாக்குமூலம் பெற்றது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை கட்டுமானத்திற்காக சுகுக் நிதியை தவறாகப் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட டான்ஶ்ரீயிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் தலைநகரில் உள்ள டான்ஸ்ரீயின் வீட்டில் எம்ஏசிசியின் இரண்டு விசாரணை அதிகாரிகள் இந்த செயல்முறையை மேற்கொண்டனர்.
மேலும் மலாக்காவில் உள்ள டான் ஸ்ரீயின் வீட்டிலும் எம்ஏசிசி சோதனை நடத்தியது. ஆனால் எந்த பறிமுதலும் செய்யப்படவில்லை என்றும் எம்ஏசிசி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட டான்ஸ்ரீயிடமிருந்து எம்ஏசிசி வாக்குமூலம் பெறும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:44 pm
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
April 30, 2026, 11:42 pm
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
