
செய்திகள் மலேசியா
விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு: தரையில் படுத்து குழந்தை போல் அழுத பயணி
மிலான்:
விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தரையில் படுத்து குழந்தை போல் அழுத பெண் பயணியின் காணொலி வைரலானது.
இந்தச் சம்பவம் கடந்த ஞாற்றுக்கிழமை இத்தாலியின் Milan Malpensa விமான நிலையத்தில் நிகழ்ந்தது.
எடை கட்டுப்பாட்டுக்கு அதிகமான பொருள்களைத் தன் கைப்பையில் வைத்திருந்ததால் Milan Malpensa விமான நிலைய ஊழியர்கள் அப்பெண்ணை விமானத்தில் ஏற அனுமதிக்கல்வில்லை.
அனைத்துப் பொருட்களையும் உடன் எடுத்துச் செல்வதாக இருப்பின் அதற்கான கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
அல்லது சில பொருள்களை வெளியே உள்ள குப்பை தொட்டியில் போடுமாறு என்றும் அவர்கள் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.
கடும் கோபமடைந்த அப்பயணி சிறு குழந்தை போல் தரையில் படுத்து கை காலைகளை அசைத்தவாரே அழத் தொடங்கியதைக் காணொலியில் காண முடிந்தது.
அவர் அழுது போராடினாலும் இறுதிவரை அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை.
அமைதி நிலைக்குத் திரும்பியப் பின் அப்பெண் மறுநாள் பயணம் செய்ய புதிய டிக்கெட்டை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm