நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரத்தில் பிரதமரின் பங்கை ரபிசி வெளிப்படுத்தினார்

கோலாலம்பூர்:

எம்ஏசிசி  விசாரிக்கும் 1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் பங்கை முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி வெளிப்படுத்தினார்.

கடந்த தேர்தலில் தோல்வியடைந்த ரபிசி, பிரிட்டிஷ் குறைக்கடத்தி நிறுவனமான ஆர்ம் ஹோல்டிங்ஸுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு டத்தோஶ்ரீ அன்வாரே அவர்களிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

தலைமை நிர்வாக அதிகாரி, ஏஆர்எம் உரிமையாளருடனான சந்திப்பில் ஈடுபட்டவர் பிரதமர் தான்.

இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்து ஒப்புதல் அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தை பல முறை தலைமை தாங்கியவர்பிரதமர் தான்.

இந்த கூட்டு முயற்சியை முறைப்படுத்தியவர் பிரதமர் தான்.

எனவே, எம்ஏசிசி உண்மையில் ஏதேனும் முறைகேடுகள் உள்ளதா என்று தேட வேண்டிய முதல் நபர் டத்தோஶ்ரீ அன்வார் தான்  என்று அவர் எக்ஸ் தளத்தில் கூறினார்.

நேற்று தனது முன்னாள் அதிகாரி ஜேம்ஸைக் கண்டறிய பொது உதவியைக் கோர எம்ஏசிசி எடுத்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்தபோது ரபிசி இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset