செய்திகள் மலேசியா
மலேசியத் தமிழர்களின் முகவரியாக முடிசூடா மன்னனாக வலம் வந்த துன் சாமிவேலுவின் 90ஆவது பிறந்த நாள் நினைவலைகள்
கோலாலம்பூர்:
மலேசியத் தமிழர்களின் முகவரியாக முடிசூடா மன்னனாக வலம் வந்த துன் சாமிவேலுவின் 90ஆவது பிறந்த நாள் நினைவலைகள் நிகழ்வை மஇகா ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வு வரும் மார்ச் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் முத்திரை பதித்த துன் ச. சாமிவேலு எனும் மாபெரும் சகாப்தத்தின் நினைவலைகலை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஇகாவின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் சிறப்புரையாற்றவுள்ளார்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையுரையாற்றவுள்ளார்.
துன் சாமிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு நம் மனதில் நிற்கும் நீங்கா நினைவுகளையும், அசைபோடும் என்னக் குவியல்களையும் பகிர்ந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஆகவே இந்த நிகழ்வின் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 1:04 pm
கெடா சிறு தொழில் மையங்களில் மாற்றம்: பாதுகாப்பும் உற்பத்தி விற்பனையும் உயர்வு
March 5, 2026, 12:56 pm
போதையில் வாகனம் ஒட்டிய ஆடவர்: இருவர் உயிரிழந்தனர்
March 5, 2026, 12:54 pm
தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியல் மூலதனமாக மாற்ற வேண்டாம் – MKN
March 5, 2026, 12:51 pm
சரவாக்கில் முதல் ரேபிஸ் நோயாளி ஒருவர் மரணமடைந்தார்: சூல்கிப்லி
March 5, 2026, 12:49 pm
இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியது: புதுடில்லி வருத்தம், இலங்கை அதிர்ச்சி
March 5, 2026, 12:49 pm
1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரத்தில் பிரதமரின் பங்கை ரபிசி வெளிப்படுத்தினார்
March 5, 2026, 11:18 am
RM1.5 மில்லியன் நில மோசடி வழக்கு: நடிகையும் கணவரும் கைது
March 5, 2026, 11:16 am
