நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமராக வேண்டும் என்ற வெறி கொண்ட மொஹைதின் மலாய்க்காரர்கள்  ஒற்றுமைக்கு  தடையாக  உள்ளார்: வான் சைபுல்

கோலாலம்பூர்:

பிரதமராக வேண்டும் என்ற வெறி கொண்ட பெர்சத்து தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் மலாய்க்காரர்கள் ஒற்றுமைக்கு தடையாக உள்ளார்.

தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் இவ்வாறு கடுமையாக சாடினார்.

இது நாட்டின் முக்கிய மலாய் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான முயற்சிகளுக்கு அவர்  முக்கிய தடையாக உள்ளார்.

சமீபத்தில் தனது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர்கள் மற்ற கட்சிகளைச் சந்தித்தபோது மொஹைதின் கோபமாகச் செயல்பட்டது,

முன்னாள் பிரதமர் ஒருங்கிணைப்பு முயற்சியை வேண்டுமென்றே நிராகரிப்பது போல் தெரிகிறது என்று கூறினார்.

உண்மையில் மொஹைதின் இப்போது அந்த நிலைப்பாட்டில் ஆவேசம் கொண்டுள்ளார்.

இது தேசியக் கூட்டணியில் உள்ள தனது கூட்டாளியான பாஸ் கட்சியுடன் நல்லுறவை மோசமடைய அனுமதிக்கும் அளவிற்கு உள்ளது என்று அவர் கூறினார்.

இன்று மொஹைதின் வெறி பதவியைப் பற்றியது போல் தெரிகிறது. ஹம்சா துணைப் பிரதமராக நியமிக்க விரும்புவதாக யாரோ குற்றம் சாட்டியபோது அவர் கோபமடைந்தார்.

அவரிடம் தகவல் இருப்பது உண்மை என்றால், அதை நிரூபிக்கவும் என்று அவர் இன்று சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset