செய்திகள் மலேசியா
பெண் கொலை வழக்கில் மியான்மர் ஆடவர் கைது
நீலாய்:
நீலாயில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதியில், கடந்த திங்கட்கிழமை இரவு, தனது நாட்டைச் சேர்ந்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவரைப் போலிசார் பூச்சோங்கில் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு கடன் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் RM10,000 கடன் வாங்கியிருந்ததாக நம்பப்படுகின்றது என்றும் நீலாய் மாவட்ட போலிஸ் தலைவர், சுபரிண்டெண்ட் ஜோஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
"இந்த கைது நடவடிக்கையை, நெகிரி செம்பிலான் மாநில குற்றப்புலனாய்வு துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு (D9), நீலாய் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு (BSJD) இணைந்து மேற்கொண்டன," என அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
சம்பவத்தில் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதத்தையும், பாதிக்கப்பட்டவரின் பொருட்களையும் அவர் வீசிய இடத்துக்கு போலிசார் கைப்பற்றினர்.
"அதனைத் தொடர்ந்து, ஒரு சட்டை, ஒரு ஜோடி செருப்பு, பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் சொந்தமான இரண்டு கைப்பேசிகள், ஒரு கத்தி ஆகியவற்றைப் போலிசார் பறிமுதல் செய்தனர்," என்றார் அவர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் 42 வயதான சந்தேக நபர், ஒரு கத்தியைப் பயன்படுத்தி பெண்ணின் கழுத்தை அறுத்ததாக ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.
"கடனைச் செலுத்தாவிட்டால் சந்தேக நபர், அவரது காதலியின் புகைப்படங்களைச் சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக, சம்பவ நாளில் RM5,500 செலுத்துமாறு பாதிக்கப்பட்ட பெண் மிரட்டியதாக கூறப்படுகிறது," என்று ஜோஹாரி கூறினார்.
மேலும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் மேலதிக விசாரணைக்காக இன்று சந்தேக நபருக்கு எதிராக தடுப்பு காவல் அனுமதி கோரப்படும் என்றும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 1:04 pm
கெடா சிறு தொழில் மையங்களில் மாற்றம்: பாதுகாப்பும் உற்பத்தி விற்பனையும் உயர்வு
March 5, 2026, 12:56 pm
போதையில் வாகனம் ஒட்டிய ஆடவர்: இருவர் உயிரிழந்தனர்
March 5, 2026, 12:54 pm
தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியல் மூலதனமாக மாற்ற வேண்டாம் – MKN
March 5, 2026, 12:51 pm
சரவாக்கில் முதல் ரேபிஸ் நோயாளி ஒருவர் மரணமடைந்தார்: சூல்கிப்லி
March 5, 2026, 12:49 pm
இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியது: புதுடில்லி வருத்தம், இலங்கை அதிர்ச்சி
March 5, 2026, 12:49 pm
1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரத்தில் பிரதமரின் பங்கை ரபிசி வெளிப்படுத்தினார்
March 5, 2026, 11:18 am
