செய்திகள் மலேசியா
RM1.5 மில்லியன் நில மோசடி வழக்கு: நடிகையும் கணவரும் கைது
சிரம்பான்:
பிரபல உள்ளூர் நடிகை ஒருவரும் அவரது கணவரும், RM1.5 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நில விற்பனை மோசடி வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு இன்று இங்குள்ள மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தம்பதியினர் நேற்று ஹுலு லாங்காட், கம்போங் சுங்கை செராய், பத்து 11, ஜாலான் குவாரி சுங்கை லாங் பகுதியில் உள்ள ஒரு தஹ்ஃபிஸ் மதரஸாவில் மறைந்து இருந்த இடத்தில் கைது செய்யப்பட்டனர்.
சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிம் செராஸ் பகுதியில் உள்ள சில நிலங்கள் மாநில அரசின் குர்னியா நிலம் என வாக்குறுதி அளித்து வழங்கப்படும் என கூறி, அந்தப் புகாராளருக்கு முன்மொழியப்பட்டதாகும்.
அதனைத் தொடர்ந்து, அந்த நடிகையின் கணவர், அவரது தாயின் வங்கிகளுக்கு பல முறை பரிவர்த்தனைகளாக மொத்தம் RM1.5 மில்லியன் செலுத்தப்பட்டதாகவும் சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி கமிஷனர் அசஹார் அப்துல் ரஹிம் கூறினார்.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. விசாரணை வெளிப்படையாக நடைபெற போலிசுக்கு இடம் அளிக்க வேண்டும்; சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு விசாரணையைப் பாதிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறோம்,” என்றார் அவர்.
இதற்கு முன்பு, ஒரு அழகு பொருட்கள் தயாரிப்பாளர், அந்த நடிகையும் அவரது கணவரும் தன்னை ஏமாற்றியதாக கூறி, ஆயிரக்கணக்கான ரிங்கிட் இழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
'Threads' செயலியில் வெளியிடப்பட்ட பதிவில், அந்த நடிகை பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்த பின் ‘மறைந்து’ இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மற்றவர்களும் பல போலிஸ் புகார்கள் அளித்துள்ளனர். அதேவேளை, அந்த நடிகை மற்றொரு பாதிக்கப்பட்டவரிடமிருந்து வந்த செய்திகளின் திரைப் பிடிப்புகளைச் (screenshot) சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாகவும், அதில் நடிகையும் அவரது கணவரின் அடையாள அட்டையின் விவரங்களும் காட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 1:04 pm
கெடா சிறு தொழில் மையங்களில் மாற்றம்: பாதுகாப்பும் உற்பத்தி விற்பனையும் உயர்வு
March 5, 2026, 12:56 pm
போதையில் வாகனம் ஒட்டிய ஆடவர்: இருவர் உயிரிழந்தனர்
March 5, 2026, 12:54 pm
தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியல் மூலதனமாக மாற்ற வேண்டாம் – MKN
March 5, 2026, 12:51 pm
சரவாக்கில் முதல் ரேபிஸ் நோயாளி ஒருவர் மரணமடைந்தார்: சூல்கிப்லி
March 5, 2026, 12:49 pm
இந்திய பெருங்கடலில் ஈரான் கப்பலை அமெரிக்கா தாக்கியது: புதுடில்லி வருத்தம், இலங்கை அதிர்ச்சி
March 5, 2026, 12:49 pm
1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரத்தில் பிரதமரின் பங்கை ரபிசி வெளிப்படுத்தினார்
March 5, 2026, 11:16 am
