நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விலங்குகளின் அணிவகுப்பில் நடந்த திருமணம்

கோலாலம்பூர்: 

விலங்குகள் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்ச்சி தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்தத் திருமண நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான @Afifah_events இது தொடர்பான காணொலியை டிக் டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பாம்புகள், தவளைகள், பறவைகள், கோழிகள் மற்றும் பல்லிகள் உள்ளிட்ட உயிருள்ள விலங்குகள் திருமண நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டதோடு அவற்றுடன் விருந்தினர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதைக் காணொலியில் காண முடிந்தது. 

தாங்கள் ஏற்பாடு செய்த நூற்றுக்கணக்கான திருமணங்களில், இதுவே முதல் முறையாக விலங்குகளின் அணிவகுப்பில் நடந்த திருமணம் என்றும் திருமண நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.  

மணமகன் கால்நடை மருத்துவர் என்பதால் விலங்குகளின் அணிவகுப்பில் தனது திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளது அனைவரையும் ஈர்த்துள்ளது. 

கால்நடை மருத்துவரின் பற்றுக்கு ஓர் எல்லை இல்லை என்று பொது மக்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். 

பல் மருத்துவராக இருப்பின் போலி பல் செட்டுகளை வழங்கியிருப்பார்களோ என்று மற்றொரு பயனர் நகைச்சுவையாகப் பதிவிட்டிருந்தார்.

வரலாற்று ஆசிரியரை மணந்தால் திருமண நிகழ்ச்சியை அருங்காட்சியகத்தில் தான் நடத்த வேண்டும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். 

வழக்கத்திற்கு மாறான இந்த திருமண நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset