நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பல் கவிழ்கிறது

கொச்சி: 

கேரள கடற்கரையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் சரக்குக் கப்பல் கவிழும் நிலையை எட்டியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 பேர்  மீட்கப்பட்டனர். 4 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தீப்பற்றிய எரிந்து கொண்டிருக்கும் கப்பல் ஒரு புறமாக சாயந்து கொண்டிருப்பதால் அதில் உள்ள கண்டெய்னர்கள் கடலில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் இந்த சரக்கு கப்பல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 23ம் தேதி  விழிஞ்ஞம்

துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் கொச்சி துறைமுகத்திலிருந்து தென்மேற்கே சுமார் 38 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மூழ்கியது. இதனால் அப்பகுதி கடல் முழுவதும் மாசு ஏற்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset