
செய்திகள் விளையாட்டு
பேராக் தமிழ்ப்பள்ளிகளுக்குடையிலான முதல் புட்சால் போட்டி: பாரதி, புருவாஸ் தமிழ்ப்பள்ளிகள் சாம்பியனானது
மஞ்சோங்:
பேராக் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான முதல் புட்சால் காற்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தெலுக் இந்தான் பாரதி தமிழ்ப்பள்ளியும், பெண்கள் பிரிவில் புருவாஸ் தமிழ்ப்பள்ளியும் சாம்பியனாக வெற்றி பெற்றன.
முதன் முதலாக நடைபெறும் இப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 24 தமிழ்ப்பள்ளியும், பெண்கள் பிரிவில் 14 தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்றன.
இதில் ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் முதல் நான்கு குழுக்களும் பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் முதல் இரு குழுக்களும் பேராக் மாநிலத்தை பிரதிநிதித்து தேசிய அளவில் அடுத்த வாரம் கெடாவில் நடைபெறும் புட்சால் போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ளனர் என்று ஏற்பாட்டுக்குழு தலைவரும், பியுசர் ஸ்டார் விளையாட்டு மன்ற தலைவருமான பயிற்சியாளர் லிம் கூறினார்.
இந்த புட்சால் போட்டி சிறப்பாக நடைபெற புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம் இப் போட்டியை தொடக்கி வைத்தபோது 18 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தார்.
மக்களின் தேவைகளை அறிந்து உதவிகள் வழங்கும் பொருட்டு பி40 குடும்பத்தாருக்கு ஒவ்வொரு மாதமும் 100 ரிங்கிட் வழங்கும் திட்டம் சுமூகமாக நடைபெற்று வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட குடும்ப தலைவரின் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு 150 ரிங்கிட் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், பல பிள்ளைகளை வைத்துள்ள பெற்றோர்களுக்கு குடும்ப சுமையும் குறையலாம் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்த புட்சால் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தில் தெலுக் இந்தான் பாரதி தமிழ்ப்பள்ளி, இரண்டாவது இடத்தில் மூகிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி, மூன்றாவது இடத்தில் சித்தியவான் மகா கணேசா தமிழ்ப்பள்ளி மற்றும் நான்காவது இடத்தில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளிகள் வெற்றி பெற்றன
பெண்கள் பிரிவின் வெற்றியாளராக முதல் இடத்தில் புருவாஸ் தமிழ்ப்பள்ளி வென்றது. இரண்டாவது இடத்தி்ல் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி, மூன்றாவது இடத்தில் சுங்கை வாங்கி தமிழ்ப்பள்ளியும் நான்காவது இடத்தில் வால்புரோக் தோட்ட தமிழ்ப்பள்ளியும் வென்றன.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 9:12 am
1,250 கோல் பங்களிப்பு: உலகக் கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய சாதனை
June 21, 2025, 9:08 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி தோல்வி
June 20, 2025, 9:26 am
கிளையன் எம்பாப்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரியல்மாட்ரிட் அறிவித்துள்ளது
June 20, 2025, 8:58 am
பிபா கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
June 19, 2025, 9:15 am
பிரபல முன்னாள் பிரான்ஸ் கால்பந்து வீரர் மரணம்
June 19, 2025, 9:14 am
பிபா கிளப்புகளுக்கான உலகக் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
June 18, 2025, 6:10 pm
2025/2026 இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியின் அட்டவணைகள் வெளியானது
June 18, 2025, 8:17 am
FIFA கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் சமநிலை
June 17, 2025, 5:12 pm
ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியைப் பெற்றுக் கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
June 17, 2025, 10:53 am