நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஜெயா மருத்துவமனையில் இணையம்,தொலைத்தொடர்பு சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: ஃபஹ்மி ஃபாட்சில் 

புத்ரா ஜெயா:

புத்ரா ஜெயா மருத்துவமனையில் இணையம்,தொலைத்தொடர்பு சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

தற்போதை சேவைகள் மனநிறைவடையும் வகையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இருப்பினும், மருத்துவமனையின் புதிய கட்டடத்தில்இணைப்பு சிக்கல்கள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். 

காசிஹ்@ஹவானா திட்டத்தி கீழ் நிதி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஃபஹ்மி செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான  இணையம்,தொலைத்தொடர்பு சேவைகளை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட பகுதியில் அதன் சேவைகளை மதிப்பீடு செய்து மேம்படுத்துமாறு புத்ரா ஜெயா மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டதாக ஃபஹ்மி கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset