
செய்திகள் மலேசியா
அப்துல் ஹாடி அவாங் பாஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினால் பாஸ் கட்சி பின்னடைவு அடையலாம்: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
கோலாலம்பூர்;
பாஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள டான்ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் அப்பதவியிலிருந்து விலகினால் பாஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும்.
இருப்பினும், அது தற்காலிக பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.
பாஸ் கட்சியின் தேசிய தலைவராக யார் வந்தாலும் அக்கட்சியின் உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற சிறிது காலம் தேவைப்படும்.
ஒருவேளை டான்ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு மாற்றாக துவான் இப்ராஹிம் துவான் மான் அல்லது தக்கியுடின் ஹசான் பாஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றால் கட்சியின் நம்பிக்கையும் நிலைத்தன்மையும் சரியாக இருக்கும் என்று ஷஸா சுக்ரி கூறினார்.
பாஸ் கட்சியின் புதிய தலைமை பொறுப்புக்கு யார் வந்தாலும் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் கட்சியின் நம்பிக்கை மீண்டும் வலுவூட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, சுகாதார காரணங்களுக்காக நடப்பு பாஸ் கட்சியின் தேசிய தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகக்கூடும் என்று மலாய் நாளிதழ் சினார் ஹாரியான் செய்தி வெளியிட்டிருந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 9, 2025, 4:49 pm
இருக்கையை அகற்றிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கார் ஓட்டும் இளைஞரின் காணொலி வைரல்
June 9, 2025, 1:00 pm
சாலையில் அடாவடி புரிந்த சிங்கப்பூர் நாட்டு ஆடவர் ஜொகூரில் கைது: காணொலி வைரல்
June 9, 2025, 11:46 am
கிரிக்கில் கோர சாலை விபத்து: நடவடிக்கை அறையை திறந்தது உப்சி பல்கலைக்கழக நிர்வாகம்
June 9, 2025, 11:09 am
வீட்டுமனை திட்டத்தில் தள்ளுபடி :சுந்தராஜூவை சாடினார் இராமசாமி
June 9, 2025, 10:26 am
எல்.ஆர்.டி கெலானா ஜெயா வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: எல்.ஆர்.டி சேவையில் தாமதம்
June 9, 2025, 10:17 am