
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் சிவன் கோயில் குடமுழுக்கு விழா சீராக நடைபெற்றது: அமைச்சர் சண்முகம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இந்து கோவில்கள் முறையாகச் செயல்பட இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை வாரியமும் ஆற்றும் பங்கை உள்துறை, தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் திரு கா சண்முகம் பாராட்டியிருக்கிறார்.
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயில் குடமுழுக்கு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னதாக டோபி காட் (Dhoby Ghaut) பகுதியில் இருந்த ஸ்ரீ சிவன் கோயிலுக்குச் சிங்கப்பூர் இந்தியர்களின் மனத்தில் சிறப்பு இடமுள்ளது என்றார் அவர்.
விழா கோலாகலமாகவும் சீராகவும் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
இந்து அறக்கட்டளை வாரியமும் இந்து ஆலோசனை வாரியமும் விழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்ததை அவர் குறிப்பிட்டார்.
குடமுழுக்கு விழாவில் 30,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 2,500 தொண்டூழியர்கள் குடமுழுக்கு விழாவில் சேவையாற்றுகின்றனர். சிங்கப்பூரில் இருக்கும் மற்ற ஆலயங்களிலிருந்தும் தொண்டூழியர்கள் வந்து உதவியதாக அமைச்சர் சொன்னார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 11:43 am
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்
June 21, 2025, 11:16 am
ஜப்பானில் அரிசி விலை இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு
June 20, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
June 20, 2025, 11:07 am
ஈரான் அதன் புரட்சிகர பாதுகாப்பு உளவுத்துறைக்கான புதிய தலைவரை நியமித்துள்ளது
June 19, 2025, 5:18 pm
தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?
June 19, 2025, 4:18 pm
ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெடித்துச் சிதறியது
June 19, 2025, 4:15 pm