செய்திகள் உலகம்
அமெரிக்க மேலாதிக்க, இனவெறியின் கோர முகமே ட்ரம்ப் விதித்த பயணத் தடை: ஈரான் கடும் கண்டனம்
தெஹரான்:
ஈரான் உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்திருப்பது, அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என்று ஈரான் விமர்சித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது முதல் முறை பதவிக்காலத்தில் இருந்தே பயணத் தடை கொள்கையை அறிமுகப்படுத்தி வருகிறார்.
இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 12 நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அவர் தடை விதித்துள்ளார்.
அதற்கான பிரகடனத்தில் கடந்த புதன்கிழமை ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது தவிர புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நாடுகள் "அதிக அளவிலான ஆபத்தை" ஏற்படுத்துபவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நாடுகளுக்கு நுழைவுத் தடை விதிக்கப்படவில்லை.
அமெரிக்க அதிபரின் புதிய பயண தடை உத்தரவு வரும் திங்கள்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டு ஈரானியர்களின் விவகாரங்களுக்கான இயக்குநர் ஜெனரல் அலிரேசா ஹஷேமி-ராஜா, "அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களிடையே இருக்கும் மேலாதிக்க, இனவெறி மனநிலையின் தெளிவான அடையாளம் இது என்று சாடியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 30, 2026, 3:19 pm
பிரபல ஷாவ்லின் கோவில் முன்னாள் தலைவருக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை
May 30, 2026, 11:16 am
தெற்கு சூடானில் மனிதாபிமான பேராபத்து: மக்களுக்கு அவசர உணவு உதவி தேவை என ஐ.நா. எச்சரிக்கை
May 29, 2026, 11:50 am
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி: ஆளில்லா வானூர்தி பறக்கத் தடை
May 28, 2026, 12:38 pm
இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தலைவர் உயிரிழந்தார்
May 28, 2026, 12:28 pm
“குளிரூட்டும் அமைப்பு கோளாறா?”: ஒரே வார்டில் 6 பச்சிளம் குழந்தைகள் பலி
May 27, 2026, 11:45 am
“அணு சக்தி” ஆற்றலைக் காட்டும் வடகொரியா: புதிய ஏவுகணை சோதனையால் உலக நாடுகள் பதற்றம்
May 27, 2026, 10:25 am
