நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைக் கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது

ஹராரே: 

ஜிம்பாப்வேவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சுமார் 800 யானைகள் வசிக்க வேண்டிய இடத்தில் 2,550 யானைகள் வசிப்பதால் மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சிக்கலைக் களைய ஜிம்பாப்வே அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

யானைகளிலிருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

உணவுக்காக யானைகளை வேட்டையாடும் நடவடிக்கை உலகளவில் கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset