நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண தகுதி சுற்றை இத்தாலி தோல்வியுடன் தொடங்கியது

ரோம்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்றை இத்தாலி தோல்வியுடன் தொடங்கி உள்ளது.

யுல்லேவல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி அணியினர் நார்வே அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இத்தாலி அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் நார்வே அணியிடம் தோல்வி கண்டனர்.

நார்வே அணியின் வெற்றி கோல்களை  அலெக்சாண்டர் சோர்லோத், அன்டோனியோ நுசா, எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் 1-1 ன்ற கோல் கணக்கில் வட மகாடோனியா அணியுடன் சமநிலை கண்டனர்.

வேல்ஸ் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் லிச்சென்ஸ்டீன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset