
செய்திகள் தொழில்நுட்பம்
முழுமையாக மின்சார கார்களுக்கு மாறுவதை ஜிவி ரைட் இ-ஹைலிங் நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது: கபீர்
காஜாங்:
முழுமையாக மின்சார கார்களுக்கு மாறுவதை ஜிவி ரைட் இ-ஹைலிங் நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது.
ஜிவி ரைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபீர் மாண்ட் இதனை தெரிவித்தார்.
நாட்டில் புதியதாக தொடங்கப்பட்டு தற்போது ஜிவி ரைட் இ-ஹைலிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.
ஜிவி ரைட்டின் இந்த வெற்றிக்கு ஓட்டுநர்களின் அர்ப்பணிப்பும் சிறந்த செயல்திறனும் முக்கிய காரணமாக உள்ளது.
ஓட்டுநர்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கு இன்று சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
காயோ டான் மெனாங் 2025 திட்டத்தின் பெரோடுவா பேசா உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த பிரச்சாரம் வெறும் போட்டி மட்டுமல்லம் ஓட்டுநர்களுக்கு விரிவான நன்மைகளை வழங்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியாகும்.
மேலும் ஓட்டுநர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
குறிப்பாக ஓட்டுநர்கள் வருமானத்தை ஈட்டுவதற்கும், தொழில் வாழ்க்கையை உருவாக்குவதற்கும், சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கும் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
இதனிடையே ஜிவி ரைட் விரைவில் சாதாரண கார்களில் இருந்து முழுமையாக மின்சார வாகனங்களுக்கு மாறவுள்ளது.
இதன் மூலம் மின்சார கார்களை வாடகையுடன் வாங்குவதற்கும் ஓட்டுநர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
மேலும் சுபாங், கோலாலம்பூர் வட்டார வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதம் முழுவதும் இலவச கட்டண சேவையை ஜிவி ரைட் வழங்குகிறது.
குறிப்பாக மலாய பல்கலைக்கழகம், உலு லங்காட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் இந்த இலவச சேவைகள் வங்கப்படவுள்ளது.
மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று கபீர் மாண்ட் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am
மோசமான வானிலையால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் நாளை ஒத்திவைக்கப்பட்டது.
June 8, 2025, 5:12 pm
ரஃபேல் விமானப் பாகம் இந்தியாவில் தயாரிப்பு
May 25, 2025, 1:37 pm
24 மணி நேரத்தில் 2-வது முறையாக முடங்கிய எக்ஸ் தளம்
May 22, 2025, 1:05 pm
Google Meet-இல் நிகழ்நேரக் குரல் மொழிபெயர்ப்பு அம்சம் அறிமுகம்
May 18, 2025, 7:32 pm
தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி
May 3, 2025, 8:01 pm