நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசா இல்லாமல் ஹஜ் யாத்திரைக்கு மலேசியர்கள் யாரும் செல்ல வேண்டாம்: முஹம்மத் நயிம் மொக்தார் எச்சரிக்கை 

கோலாலம்பூர்:

சவூதி அரேபிய அரசாங்கத்திடமிருந்து ஹஜ் விசா இல்லாத மலேசியர்கள் புனித மக்காவில் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டாம்.

பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரங்களான அமைச்சர் முஹம்மத் நயிம் மொக்தார் எச்சரித்துள்ளார்.

சவூதி அரேபிய அரசாங்கத்தால் விசாக்கள் இடைநிறுத்தப்படுவது உட்பட எதிர்காலத்தில் நாடு தனது ஹாஜ் ஒதுக்கீட்டை இழக்கும் அபாயத்தைத் தடுக்கப்பட வேண்டும்.

சவூதி அரேபிய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறுவதற்கு நமது பிடிவாதத்தை வழிவகுக்க வேண்டாம்.

இது எதிர்கால ஹஜ் பயணிகளைப் பாதிக்கும் என்று அவர் மீண்டும் எச்சரித்தார்.

Tabung Haji - Tabung Haji added a new photo.

முன்பு 14 நாடுகள் உம்ரா, தற்காலிக விசாக்களைப் பெறுவதிலிருந்து சவூதி அரேபிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன.

ஏனெனில் அந் நாடுகளின் குடிமக்கள் அதிக அளவில் விதிமீறல்களைச் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சந்தித்தபோது அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset