நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜெர்மனியில் கத்திக்குத்துக்கு இலக்கான 17 பேர்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி 

ஹம்பர்க்:

ஜெர்மனியின் ஹம்பர்க் (Hamburg) நகரில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் குறைந்தது 17 பேரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படும் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

39 வயது சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைதுசெய்யப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது.

சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் மலேசிய நேரப்படி பின்னிரவு 12 மணிக்கு நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன.

தாக்குதலுக்குப் பிறகு ஜெர்மனியின் பிரதமர் ஃபிரைட்ரிச் மெர்ஸ் (Friedrich Merz) ஹம்பர்க் மேயருடன் பேசியபோது தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

"பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நான் ஆறுதல் கூறினேன்" என்றார் மெர்ஸ்.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset