நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிப்பதற்கான தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது

வாஷிங்டன்:

 ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிப்பதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தடை உத்தரவை மாவட்ட நீதிமன்றம் தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இந்த உத்தரவு ஹார்வர்டில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்குத் தற்காலிக ஆறுதலை அளித்துள்ளது.  

முன்னதாக, வெளிநாட்டு மாணவர்களைப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்தது.

பல்கலைக்கழகத்திற்கு எதிராக நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்தது.

வளாகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் பல்கலைக்கழகங்களைக் கோரியிருந்தார். ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அதை ஏற்க மறுத்தது.

எனவே அதற்கு சேர வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் டிரம்ப்  நிறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset