நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தொடரும் கன மழை: நீரில் தத்தளிக்கிறது சென்னை

சென்னை:

சென்னையில் புதன்கிழமை இரவு முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக உருமாறி  வியாழக்கிழமை மாலை  காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுக்க விடிய விடிய மழை பெய்தது.

Faulty weather forecast system worsened Chennai's rain woes | Latest News  India - Hindustan Times

Chennai underwater: Airport shut, railways inundated as Met predicts more  rains-India News , Firstpost

சென்னையில் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.

ஏற்கனவே மழை காரணமாக அதிக வெள்ளம் ஏற்பட்ட, தி நகர், வேளச்சேரி பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., எம்ஆர்சி நகரில் 13.6 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset