
செய்திகள் தமிழ் தொடர்புகள்
குமரிக் கரையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
கடல் நடுவே விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இந்த சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை நிறுவி வரும் 1-ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதையொட்டி, தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதன் சிறப்பம்சமாக, திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில், ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்துக்கு கண்ணாடி இழை நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணி அளவில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் ‘விவேகானந்தா’ படகில், கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை பாறைக்கு சென்றார். அவரை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். சிலையின் நுழைவுவாயிலில் ‘பேரறிவு சிலை’ (Statue of Wisdom) என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்து, வெள்ளி விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தின் வழியே விவேகானந்தர் பாறை வரை நடந்து சென்ற முதல்வர், மீண்டும் பாலம் வழியாக திருவள்ளுவர் பாறைக்கு திரும்பினார். அமைச்சர்கள், பிரமுகர்களும் உடன் சென்றனர். பின்னர், திருவள்ளுவரின் பாதத்தில் முதல்வர் மலர் தூவி வணங்கினார்.
அங்கிருந்து திருவள்ளுவர் சிலை மற்றும் கடலின் இயற்கை அழகை ரசித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 4:01 pm
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
April 30, 2025, 3:52 pm
‘உங்கள் பாதுகாப்பே முக்கியம்’: வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
April 28, 2025, 10:11 am
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்
April 28, 2025, 8:21 am
கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
April 28, 2025, 8:07 am
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்
April 27, 2025, 12:05 pm
இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்...?கோவையில் விஜய் பேச்சு
April 27, 2025, 12:09 am
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
April 26, 2025, 5:12 pm