செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் அடைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு
மதுரை:
மதுரையில் தடையை மீறி நீதி யாத்திரை நடத்த முயன்று கைதான நடிகை குஷ்புவையும் பாஜகவினரையும் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை செல்லத்தம்மன் கோயில் முன்பு நீதி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இதற்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பாஜகவினர் பேரணி நடத்தத் தொடங்கினர். இதையடுத்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக மாநில மகளிரணி தலைவர் உமா ரவி உட்பட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாஜகவினர் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவ ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்கெனவே ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
மண்டபத்துக்கு பாஜகவினர் அழைத்து வரப்பட்ட பிறகும் வெளியே இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மண்டபத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இதனால் மண்டபத்துக்கள் ஆடுகளின் சத்தமும், ஆடுகளின் கழிவுகள் காரணமாக துர்நாற்றமும் வீசியது.
இதனால் குஷ்புவும் பாஜகவினரும் தங்களை வேறு மண்டபத்துக்கு மாற்றக்கோரி போலீஸாரிடம் கேட்டுக் கொண்டனர். வேறு மண்டபத்துக்கு மாற்றக்கோரி மண்டபத்துக்குள் இருந்து பாஜகவினர் கோஷம் எழுப்பினர். அதனை போலிசார் கண்டுகொள்ளவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 6, 2025, 1:14 pm
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதால் சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர்
January 6, 2025, 8:48 am
தமிழகத்தில் இன்று முதல் 11-ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
January 3, 2025, 3:22 pm
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணியொருவரிடமிருந்து ரூ. 15.12 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
January 1, 2025, 7:54 pm
ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகையால், புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது
December 31, 2024, 7:19 pm
‘யார் அந்த சார்?’ அதிமுகவின் போராட்டம் ஏன்?: எடப்பாடி பழனிசாமி
December 31, 2024, 7:11 am