நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

போலி கடப்பிதழ் மூலம் மலேசியாவுக்கு சென்று திரும்பிய இருவர் கைது

திருச்சி:

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நியாஸ், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவர்கள் போலி முகவரியில் கடப்பிதழ் மூலம் வெளிநாடு சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டு பேரையும் விமான காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

அவர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset