செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணியொருவரிடமிருந்து ரூ. 15.12 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
திருச்சி:
மலேசியாவில் இருந்து பயணியொருவா் கடத்தி வந்த ரூ.15.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு வந்தது.
அதில் வந்த பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினா் வழக்கமான சோதனைக்கு உள்ளாக்கினா்.
அப்போது, பயணி ஒருவா் கொண்டு வந்த சமையல் எரிவாயு உருளையில் பயன்படுத்தும் ரெகுலேட்டா் சாதனத்தில் பால்ரஸ் வடிவில் 194 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 15.12 லட்சம்.
அதை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 6, 2025, 1:14 pm
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதால் சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர்
January 6, 2025, 8:48 am
தமிழகத்தில் இன்று முதல் 11-ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
January 3, 2025, 7:48 pm
ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் அடைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு
January 1, 2025, 7:54 pm
ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகையால், புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது
December 31, 2024, 7:19 pm
‘யார் அந்த சார்?’ அதிமுகவின் போராட்டம் ஏன்?: எடப்பாடி பழனிசாமி
December 31, 2024, 7:11 am