
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சியில் 2,447 சிவப்பு நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ஆடவர் கைது
திருச்சி:
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,447 சிவப்பு நட்சத்திர ஆமைகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது.
இதனை தடுக்க, பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பத்தேக் ஏர் விமானத்தின் மூலம் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், சாக்லேட் பெட்டிகளைப் போன்ற அட்டைப் பெட்டிகளில் கடத்தி வந்த 2,447 சிவப்பு நட்சத்திர ஆமைக் குஞ்சுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிவப்பு நட்சத்திர ஆமைகளை இந்தியாவிற்குள் கொண்டு வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஆமைகளால் ஏற்படக்கூடிய ஆபத்து தெரியாமல் பலரும், செல்லப் பிராணிகளாக வளர்க்க விரும்பி, அதை விலை கொடுத்து வாங்குகின்றனர்.
இந்த வகை ஆமைகள் சிறியதாக இருந்தாலும், அதிவேகமாக வளரக் கூடியவை.
இது அளவில் பெரிதாகி விட்டால், வீட்டில் வளர்க்க முடியாமல் பெரும்பாலானோர் அக்கம் பக்கத்தில் இருக்கும் நீர்நிலைகளில் கொண்டு சென்று விட்டு விடுகின்றனர்.
அங்கு சிவப்பு நட்சத்திர ஆமைகள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து, இந்திய ஆமைகளின் வாழ்விடம், உணவு ஆகியவற்றை அபகரிக்கின்றன.
பல வகையான தவளைகள், மீன்களையும் கபளீகரம் செய்கின்றன.
அதனால் இந்த வகை ஆமை, இந்திய சுற்றுச் சூழலுக்கே ஆபத்தாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:39 pm
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
April 30, 2025, 4:01 pm
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
April 30, 2025, 3:52 pm
‘உங்கள் பாதுகாப்பே முக்கியம்’: வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
April 28, 2025, 10:11 am
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்
April 28, 2025, 8:21 am
கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
April 28, 2025, 8:07 am
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்
April 27, 2025, 12:05 pm
இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்...?கோவையில் விஜய் பேச்சு
April 27, 2025, 12:09 am
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
April 26, 2025, 5:12 pm