செய்திகள் தமிழ் தொடர்புகள்
அண்ணனாகவும், அரணாகவும் உறுதுணையாக இருப்பேன்: தவெக தலைவர் விஜய்
சென்னை:
அனைத்து சூழ்நிலையிலும் அண்ணனாகவும், அரணாகவும் உறுதுணையாக இருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் வெளியிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில். அன்புத் தங்கைகளே, ல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள்,என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன்.
நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது நெரிந்ததே.
அதற்காகவே இக்கடிதத்தை எழுதுகிறேன். அனைத்துச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2025, 7:54 pm
ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகையால், புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது
December 31, 2024, 7:19 pm
‘யார் அந்த சார்?’ அதிமுகவின் போராட்டம் ஏன்?: எடப்பாடி பழனிசாமி
December 31, 2024, 7:11 am
குமரிக் கரையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
December 30, 2024, 5:20 pm
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியைச் சந்தித்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
December 30, 2024, 8:35 am
திருச்சியில் 2,447 சிவப்பு நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ஆடவர் கைது
December 28, 2024, 5:21 pm
போலி கடப்பிதழ் மூலம் மலேசியாவுக்கு சென்று திரும்பிய இருவர் கைது
December 27, 2024, 7:33 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
December 26, 2024, 4:12 pm