செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை:
அரபிக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வடதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது.
வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.
புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. தெற்கு கேரள கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று முதல், டிசம்பர் 29 ஆம் தேதிவரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 1, 2025, 7:54 pm
ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகையால், புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்தது
December 31, 2024, 7:19 pm
‘யார் அந்த சார்?’ அதிமுகவின் போராட்டம் ஏன்?: எடப்பாடி பழனிசாமி
December 31, 2024, 7:11 am
குமரிக் கரையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
December 30, 2024, 5:20 pm
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியைச் சந்தித்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்
December 30, 2024, 3:24 pm
அண்ணனாகவும், அரணாகவும் உறுதுணையாக இருப்பேன்: தவெக தலைவர் விஜய்
December 30, 2024, 8:35 am
திருச்சியில் 2,447 சிவப்பு நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ஆடவர் கைது
December 28, 2024, 5:21 pm
போலி கடப்பிதழ் மூலம் மலேசியாவுக்கு சென்று திரும்பிய இருவர் கைது
December 26, 2024, 4:12 pm