செய்திகள் விளையாட்டு
2025இல் உலகின் பணக்கார விளையாட்டு வீரர் ரொனால்டோ தான்
ரியாத்:
போர்த்துகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
உலக கால்பந்து ஜாம்பவான்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லியோனல் மெஸ்ஸியும் உள்ளனர்.
ஆனால், ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, கிறிஸ்டியனோ ரொனால்டோ கடந்த ஆண்டு 275 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தார்.
ஏனெனில், இவருக்கு அடுத்த இடங்களில் உள்ளவர்களின் வருமானம் மிகக் குறைவு.
ரொனால்டோ ஜூவாந்தஸில் இருந்து அல் நசருக்கு மாறிய பிறகு, அவரது ஆண்டு வருமானம் 200 மில்லின் டாலரைத் தாண்டியது.
இதன்மூலம் அவர் வரலாற்றில் ஆண்டுக்கு அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக மாறினார் என ஃபோர்ப்ஸ் கூறுகிறது.
கால்பந்து விளையாட்டு மட்டுமன்றி, வணிக ரீதியாகவும் ரொனால்டோ வருமானம் ஈட்டி வருகிறார்.
அதாவது, தனது விளம்பர ஒப்பந்தங்கள், சொந்த பிராண்டின் (CR7) கீழ் ஹோட்டல்கள், வாசனை திரவியங்கள், ஜிம்கள் போன்ற வணிகங்கள் மூலமாக அவர் பணம் பெற்று வருகிறார்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் இருக்கிறார். இவரது வருமானம் 133.8 மில்லியன் டாலர் ஆகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 16, 2026, 1:09 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 15, 2026, 11:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 15, 2026, 11:00 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
February 14, 2026, 9:48 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: செல்சி வெற்றி
February 13, 2026, 10:02 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா தோல்வி
February 13, 2026, 9:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
February 12, 2026, 10:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
February 10, 2026, 9:22 am
சீசன் முடியும் வரை காத்திருங்கள்: மைக்கல் கேரிக்
February 10, 2026, 9:04 am
ரொனால்டோவுக்காக முதலீடு செய்வது லாபகரமானது அல்ல
February 9, 2026, 8:57 am
