நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலத்தில் ஒரே வாரத்திற்குள்  இரு இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்: டேவிட் மார்சல்

ஷாஆலம்: 

சிலாங்கூர் மாநிலத்தில் ஒரே வாரத்திற்குள் இரு இந்து ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன.

உரிமை கட்சியின் இடைக்கால துணைத் தலைவர் டேவிட் மார்சல் இதனை கூறினார்.

ஒரு வாரத்திற்குள் சிலாங்கூரில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்கள் குறித்து உரிமை கட்சி தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.

முதல் சம்பவமாக, கப்பார் பகுதியில் உள்ள ஸ்ரீ மகா ஆயிரம் கண்ணுடையார் ஆலயம் கோவிலில் உள்ள சிலையை அறுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது அம்பாங்கில் உள்ள தேவி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் சிலைகளை ஒரு நபர் சேதப்படுத்த முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரைக் குற்றம் நிரூபிக்கும் முன் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர என அடையாளம் காண்பது மிகவும் ஏமாற்றமாக உள்ளது.

இது சம்பவத்தைக் குறைவாக மதிக்க ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த செயற்பாடுகள் திட்டமிட்ட சதி. மேலும் இந்து ஆலயங்கள் மீது கெட்ட நோக்கத்துடன் சில குழுக்கள் செயல்படுகின்றன என உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.

சமீப காலமாக சமூக ஊடகங்களில் இந்து ஆலயங்களை சட்டவிரோதமான ஆலயங்கள் என குறிப்பிடுவதை உரிமை கட்சி கடுமையாக கண்டிக்கிறது. 

இத்தகைய பொய்யான தகவல்களை பரப்பும் சமூக ஊடக கணக்குகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.

இவை மத தீவிரவாத சிந்தனைகளை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நடவடிக்கையின் ஆரம்பக் கட்டமாக பார்க்கப்படக்கூடியது.

ஆக நாட்டின் ஒற்றுமை, அமைதி அனைவருடைய பொறுப்பாகும். 

குறிப்பாக நீதியும் பாதுகாப்பும் அனைவருக்கும் உறுதியாக வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset