
செய்திகள் மலேசியா
அனைத்துலக புத்தாக்க சாதனையாளர் விருது: மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
கோலாலம்பூர்:
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு அனைத்துலக புத்தாக்க சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அனைத்துலக கலாச்சார, அமைதி, சுற்றுச்சூழல் அறக்கட்டளை இந்தியாவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த அறவாரியத்தின் சிறப்பு விருது வழங்கும் விழா அண்மையில் தலைநகரில் நடைபெற்றது.
மலேசியாவைச் சேர்ந்த பல பிரமுகர்கள் சாதனையாளர்களுக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு அனைத்துலக புத்தாக்க சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டது.
மாஜூ ஜெயா வாரியக் குழுத் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் தற்போது வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவ்விருது மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.
ஆக வரும் காலங்களில் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் வெற்றி பாதையில் பயணிக்கும் என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2025, 9:58 pm
பமெலா லிங் மரணம் தொடர்பாக அறிக்கை போலியானது: போலீஸ் விளக்கம்
May 19, 2025, 9:37 pm
பிகேஆர் கட்சித் தேர்தல் சூட்டை தணியுங்கள்: டத்தோஶ்ரீ அன்வார் கருத்து
May 19, 2025, 6:12 pm
அந்நிய நாட்டவர்கள் செலுத்திய 14 கார்களை பினாங்கு மாநில JPJ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
May 19, 2025, 5:49 pm