நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய நாட்டவர்கள் செலுத்திய 14 கார்களை பினாங்கு மாநில JPJ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் 

ஜார்ஜ்டவுன்: 

அந்நிய நாட்டவர்கள் செலுத்தியதாக நம்பப்படும் 14 கார்களை பினாங்கு மாநில JPJ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

PEWA திட்ட நடவடிக்கையின் பேரில் JPJ அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 

11 மோட்டார் சைக்கிளும் 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. காரணம் சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவர்கள் யாரிடமும் முறையாக வாகன உரிமம் இல்லை என்று JPJ அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், வாகன காப்புறுதி ஆவணங்களும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

வாகனமோட்டிகள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பினாங்கு மாநில JPJ அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset