நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

யாசி விருது விழாவில் கலைத்துறை சாதனையாளருக்கு கலைச் செம்மல் விருது; துன் சாமிவேலு நினைவாக வழங்கப்படும்: டத்தோ கீதாஞ்சலி ஜி

கோலாலம்பூர்:

யாசி விருது விழாவில் கலைத்துறை சாதனையாளருக்கு கலைச் செம்மல் விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விருது துன் சாமிவேலு நினைவாக வழங்கப்படவுள்ளது என்று அவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ கீதாஞ்சலி ஜி கூறினார்.

மலேசிய இந்தியக் கலைஞர்கள் அறவாரியத்தில் யாசி விருதளிப்பு விழா வரும் மே 31ஆம் தேதி செந்துல் எச்ஜிஎச் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விருது விழாவில் மொத்தம் 48 விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

திரைத்துறை, ஆஸ்ட்ரோ, அரசாங்கத் தொலைக்காட்சிப் படைப்புகள், வானொலி, மேடை, இசைத்துறை, கொரவ விருதுகள் இப்படி பல விருதுகள் காத்திருக்கின்றன. 

2023, 2024இல் வெளியான படைப்புகள் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

யாசி விருது விழாவில் கௌரவ, அங்கீகார விருதுகள் மட்டும் இல்லாது, இசை, நடனப் படைப்புகள், விருந்துணவு என பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் கலைத் துறையில் சாதித்தவருக்கு கலைச் செம்மல் விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விருது மலேசிய மாமனிதர் துன் சாமிவேலு நினைவாக வழங்கப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

இவ்விழாவில்  6 விருதுகள் மக்கள் தேர்வு அடிப்படையில் முறையில் நடைபெறும். அந்த ஆறு மக்கள் தேர்வு விருதுகளில் ஏற்கனவே மூன்று விருதுகளுக்கு போட்டி போடும் இறுதிச் சுற்று கலைஞர்களை கடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தியுள்ளோம். 

மே 30 வரை நீங்கள் அவர்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு முறை அடிப்படையில் வாக்குப் பதிவு செய்யலாம். 

இன்று முதல் மேலும் மூன்று விருதுகளுக்கான மக்கள் தேர்வு வாக்களிப்பு இணைக்கப்பட்டுள்ளன.

பிரபல தொலைக்காட்சி ஆண் அறிவிப்பாளர், பிரபல தொலைக்காட்சி பெண் அறிவிப்பாளர், சமூக ஊடகத்தில் ஆதிக்கம் புரிபவர்கள் அந்த மூன்று பிரிவாகும்.

மக்கள் Yasi.com.my அகப்பக்கத்திலும் @yasi_malaysia instagram bio-வில் உள்ள link மூலமாகவும் வாக்குகள் செலுத்தலாம். QR Code மூலமாகவும் வாக்குகள் செலுத்தலாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset