நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேலிக் கூத்தாகும் இந்தியர்களின் வரலாறுகளை ஆவணப்படுத்த அருங்காட்சியகத்தை மஇகா அமைக்க வேண்டும்: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

கேலிக் கூத்தாகும் இந்தியர்களின் வரலாறுகளை ஆவணப்படுத்த அருங்காட்சியகத்தை மஇகா அமைக்க வேண்டும்.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.

இந்திய  அருங்காட்சியகம் அமைக்கப்படுவது தொடர்பாக இன்று மஇகா தலைமையகத்தில் அவர் தமது ஆதரவாளர்களுடன் இணைந்து மகஜரை வழங்க வந்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் அவரால் மகஜரை வழங்க முடியவில்லை. 

வேறொரு தேதியில் மகஜரை வழங்க வருவோம் என்று அவர் சொன்னார்.

பினாங்கு மாநிலத்தில் இந்து அறப்பணி வாரியத்தின் மூலம் தமிழ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறேன்.

அதே போல் மஇகா இந்தியர்களின் வரலாறுகளை அடிப்படையாக கொண்டு  அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும்.

இது நமது கலை கலாச்சாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்.

குறிப்பாக நமது வரலாறுகள் கேள்விக்குறியாகாது. காலத்துக்கும் நீடித்து நிற்கும்.

இந்த இந்திய  அருங்காட்சியகத்தில் தூக்கில் தொங்கிய மலாயா கணபதி, சுதந்திரம் பெற்றுத் தர  போராடி தலைவர்கள், நாட்டிற்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த இந்திய விளையாட்டாளர்கள், மலேசிய ராணுவ, போலிஸ் படையில் பணியாற்றிய இந்திய வீரர்களின் வரலாறுகள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற  வேண்டும்.

இதை தவிர்த்து தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களின் வரலாறுகளும் இங்கு இடம் பெற வேண்டும்.

ஆக மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் முயற்சி செய்து இந்திய அருங்காட்சியகம் அமைக்க துணை புரிய வேண்டும்.

இதுவே எங்களின் கோரிக்கை  என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset