நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

160 முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்களை பகாங் சுல்தான் அல் - சுல்தான் அப்துல்லா சந்தித்தார்

கோலாலம்பூர்:

நாட்டின் 160 முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்களை பகாங் சுல்தான் அல் - சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் ஷா சந்தித்தார்.

மலேசியாவின் முன்னாள் விளையாட்டாளர்களை கொண்டாடும் வகையில் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது.

ஸ்போர்ட்ஸ் ஃபிளேம் ஏற்பாட்டில் இந்த  விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமையேற்ற பகாங் சுல்தான் 160 முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்களுடன் நேரத்தைச் செலவிட்டார்.

விளையாட்டாளர்கள் அமர்ந்திருந்த மேஜைகளுக்கு அவர் நடந்து சென்றார்.
அவர்களுடன் பேசினார்.

பல முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

குறிப்பாக மென்செஸ்டர் யுனைடெட் ஜாம்பவான் ராயன் கிக்ஸ் இந்த நிகழ்வில் திடீரென தோன்றினார்.

அல்-சுல்தான் அப்துல்லாவுக்கு கையொப்பமிடப்பட்ட கிளப் ஜெர்சியையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் 1960கள் முதல் 1980கள் வரை மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய 160 தேசிய விளையாட்டு நட்சத்திரங்கள் கௌரவிக்கப்பட்டனர்.

சந்தோக் சிங் (கால்பந்து), ஜேம்ஸ் செல்வராஜ் (பூப்பந்து), நோர்ஷீலா காலித் (தடகளம்), கெவின் நுனிஸ் (ஹாக்கி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக 1975 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியில்  வரலாற்றுச் சிறப்புமிக்க நான்காவது இடத்தைப் பிடித்ததற்காக அவ்வாண்டு தேசிய ஹாக்கி அணிக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.

முன்னாள் விளையாட்டு பத்திரிகையாளர்களான லாசரஸ் ரோக், ஜார்ஜ் தாஸ், ஃபௌஸி ஓமர், மறைந்த ஆர், வேலு ஆகியோரின் கூட்டு முயற்சி கடந்த 2011ஆம் ஆண்டு  ஸ்போர்ட்ஸ் ஃபிளேம் அறிமுகப்படுத்தப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset