
செய்திகள் மலேசியா
பமெலா லிங் மரணம் தொடர்பாக அறிக்கை போலியானது: போலீஸ் விளக்கம்
கோலாலம்பூர்:
நேற்று முதல் சமூக ஊடகங்களில் டத்தின்ஶ்ரீ பமெலா லிங் உடல் என்று நம்பப்படும் சடலம் ஒன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிவந்த தகவலை சிலாங்கூர் மாநில போலீஸ் மறுத்துள்ளது.
டத்தின்ஶ்ரீ பமெலா லிங் மரணமடைந்துவிட்டதாக வெளிவந்த செய்தியானது போலி என்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் கூறினார்.
போலி செய்திகளைப் பரப்புவது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். 1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233(1)இன் கீழ் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஹுசைன் ஒமார் கான் எச்சரித்தார்.
மேலும், போலி செய்திகளைப் பரப்பும் நபருக்கு எதிராக 50 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2025, 9:37 pm
பிகேஆர் கட்சித் தேர்தல் சூட்டை தணியுங்கள்: டத்தோஶ்ரீ அன்வார் கருத்து
May 19, 2025, 6:12 pm
அந்நிய நாட்டவர்கள் செலுத்திய 14 கார்களை பினாங்கு மாநில JPJ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
May 19, 2025, 5:49 pm