நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அடைவு நிலையை மேம்படுத்தும் திட்டங்கள் தொடரும்: செங்குட்டுவன்

ஷாஆலம்: 

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அடைவு நிலையை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா தமிழ்மொழிப் பிரிவின் உதவி இயக்குநர் செங்குட்டுவன் வீரன் இதனை கூறினார்.

சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பாடக்குழு மேலாண்மை மேம்பாடு, வகுப்பறை மதிப்பீட்டு பயிலரங்கம் இன்று நடைபெற்றது.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளில் இருந்தும் தமிழ்மொழி ஆசிரியர்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

முனைவர் சுகுனாவதி இப்பயிலரங்கை சிறப்பான முறையில் வழி நடத்தினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஆசிரியர்கள் தயாராக வேண்டும்.

குறிப்பாக வகுப்பறை மதிப்பீட்டு சோதனைகள் மாணவர்களுக்கு புதிய சவாலாக உள்ளது.

இருந்தாலும் இச்சோதனையின் மாணவர்களின் அடைவு நிலை மேலோங்கி செல்ல வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இப்பட்டறை நடத்தப்பட்டது.

ஆக மொத்தத்தில் இப்பயிலரங்கம் ஆசிரியர்களுக்கு பெரும் பயனாக அமைந்தது என்று செங்குட்டுவன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset