
செய்திகள் மலேசியா
ஊடகத்தினருக்கும் விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்த Fivestar Trading
பெட்டாலிங் ஜெயா:
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் சிறப்பு காட்சியுடன் இணைந்து ஊடகவியலாளர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
ஜூன் 16-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள LFS Petaling Jaya-வில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
இதில் ஊடகவியலாளர்களும் திரைப்பட விமர்சகர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊடகவியலாளர்களுக்கும் திரைப்பட விமர்சகர்களுக்கும் Five Star நிறுவனத்தின் தலைமை மேலாளர் டாக்டர் சாய் சுதன் நன்றி தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஊடகங்கள் வழங்கும் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திரைப்படம் குறித்த வெளிப்படையான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் ஊடகவியலாளர்களுக்கும் திரை விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு நற்சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சின் முக்கிய அம்சமாக, நம்பிக்கை ஊடக நிறுவனம் தனது கலைத் துறை சார்ந்த செய்திகளை வெளியிடுவதற்கும் கலை துறையின் வளர்ச்சிக்கு பங்களித்ததற்கும் பாராட்டப்பட்டது.
இந்நிறுவனத்தின் தலைமை மேலாளராகப் பணியாற்றும் தயாளன் சண்முகம், நம்பிக்கையின் சார்பில் நினைவு சின்னத்தையும் நற்சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் தற்போது நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் இத்திரைப்படத்தை Fivestar Trading நிறுவனம் வெளியீடு செய்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 10:46 am
வீ கா சியோங் அமைச்சரவையில் இருந்தபோது எல்ஜிபி கேஸ் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது: அர்மிசான்
June 1, 2025, 10:07 am
புருணை சுல்தான் IJNனை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்
June 1, 2025, 10:02 am
தெங்கு ஸப்ருல் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை; தேர்தல் ஒப்பந்தம் செல்லுபடியாகாது: ஹசான்
May 31, 2025, 2:49 pm
தெங்கு ஸப்ருலின் பதவி விலகல் கடிதத்தை அம்னோ பெற்றுக்கொண்டது: ஸாஹித் ஹமிடி உறுதி
May 31, 2025, 2:18 pm
இக்லாஸ் சுங்கை பூலோவின் கீழ் மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் தொடரும்: டத்தோஸ்ரீ ரமணன்
May 31, 2025, 1:52 pm
அரசாங்கத்தில் தெங்கு ஸப்ருலை மாற்றுவதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும்: நஸ்ரி
May 31, 2025, 1:50 pm