நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும்: சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டை வரவேற்ற பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மலேசியாவின் பொருளாதார செயல்திறன் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மதிப்பீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார், பொருளாதார நிலைத்தன்மை பொறுப்புடன் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்று வலியுறுத்தியுள்ளார்.

நிதியமைச்சராகவும் இருக்கும் பிரதமர் அன்வார், பொருளாதார நிலைத்தன்மை விவேகத்துடன் நிர்வகிக்கப்படுவதை மட்டுமல்லாமல், பாதுகாப்பான, நியாயமான வேலை வாய்ப்புகள், எதிர்காலத்தில் நிலையான நம்பிக்கை மூலம் மக்களால் உணரப்படுவதையும் அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று கூறினார்.

"மதானி அரசாங்கம் பொது நிதிகளை விவேகத்துடன் நிர்வகித்து வருகிறது. 13வது மலேசியா திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை துரிதப்படுத்தி வருகிறது. இதனால் நாங்கள் கட்டமைக்கும் வளர்ச்சி உண்மையிலேயே வலுவானதாகவும், மீள்தன்மை கொண்டதாகவும், அனைத்து மலேசியர்களுக்கும் அர்த்தமுள்ள நன்மைகளை வழங்கும்" என்று அவர்  கூறினார்.

நேற்று முன்னதாக, மலேசியாவிற்கான IMF மிஷன் தலைவர் மசாஹிரோ நோசாகி, உலகளாவிய வர்த்தக பதற்றங்கள், கொள்கை நிச்சயமற்ற தன்மைக்கு எதிராக மலேசியா குறிப்பிடத்தக்க மீள்தன்மையைக் காட்டியுள்ளது என்றார். இந்த ஆண்டு பொருளாதாரம் ஆரோக்கியமான வேகத்தில் வளர்ந்து வருகிறது, வலுவான உள்நாட்டு நுகர்வு, முதலீடு, உறுதியான வேலைவாய்ப்பு வளர்ச்சி, உலகளாவிய தொழில்நுட்பத் துறை மேம்பாடு ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்..

"வலுவான செயல்திறன் ஓரளவுக்கு நல்ல பொருளாதாரக் கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது, அதிகாரிகள் விவேகமான பெரிய பொருளாதார , நிதிக் கொள்கைகளைப் பராமரித்து வருகின்றனர்," என்று நோசாகி கூறினார்.

- பெர்னாமா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset