
செய்திகள் இந்தியா
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
புதுடெல்லி:
பஞ்சாப் - ஹரியானா தலைநகரான சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதியில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானில் 9 இடங்களில் 24 ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. தொடர்ந்து, மிக முக்கிய நடவடிக்கையாக லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பை தாக்கி அழித்துள்ளது.
அதோடு, பாகிஸ்தானின் விமானப் படை தாக்குதல் முயற்சிகளை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து முறியடித்து வருகின்றன.
பலத்த சேதத்துக்கு மத்தியிலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், இந்தியா உறுதியான பதிலடியை கொடுத்து வருகிறது.
‘உஷார் நிலையில் சண்டிகர்’ - இந்நிலையில், பாகிஸ்தான் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, சண்டிகர் நகர மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am