நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரஃபேல் ஒப்பந்தம்: பிரான்ஸ் நிறுவனம் ரூ.60 கோடியை லஞ்சமாக வழங்கியது

புது டெல்லி:

ரஃபேல் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம், இடைத்தரகருக்கு சுமார் ரூ.60 கோடியை லஞ்சமாக வழங்கியதாக அந்நாட்டின் புலனாய்வு இதழ் செய்தியை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு இந்தியாவின் பிரதமர் மோடி அரசு கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அவற்றில் 26 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளன. மீதமுள்ளவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

French portal Mediapart publishes yet another dubious report on Rafale

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம், இடைத்தரகராகச் செயல்பட்ட இந்திய நிறுவனம் ஒன்றுக்கு தரகுத் தொகை கொடுத்ததாக பிரான்ஸ் புலனாய்வு இதழ் (மீடியாபார்ட்) ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்தது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தன.

இந்நிலையில், அந்த இதழ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட புதிய செய்தி அறிக்கையில், ரஃபேல் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் குறைந்தபட்சம் ரூ.60 கோடியை இடைத்தரகராகச் செயல்பட்ட சுஷேன் குப்தாவுக்கு தரகுத் தொகையாக வழங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset