நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் தலைமையில் 52 மலேசிய பேராளர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர்:

திருச்சியில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால் தலைமையில் 51 மலேசிய பேராளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளில் வரும் மே 9,10,11ஆம் தேதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ளது.

உலகின் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக மலேசியாவில் இருந்து செல்லும் பேராளர்களுக்கு மலேசிய இஸ்லாமிய கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் தலைமையேற்றுள்ளார்.

இப் பேராளர்கள் குழுவில் கிம்மா, ஈமான் கட்சிகள், பெர்மிம் பேரவை, மிம்கோய்ன், பிரிம், மலாக்கா முஸ்லீம் லீக், கெபிமா, எம்எம்ஒய்சி, அமானா, மாவார், பிரஸ்மா  உட்பல பல இயக்கங்களில் இருந்து பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்..

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம் மாநாட்டை தொடக்கி வைத்து பேருரையாற்றவுள்ளார். தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றவுள்ளார்.

மஇகா துணைத் தலைவருமான தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன், டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால், தமிழக அமைச்சர்களான கேஎன் நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உட்பட பலர்  வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.

கிம்மா தலைவர் டத்தோஶ்ரீ  செய்யது இப்ராஹிம், டான்ஸ்ரீ முஹம்மது ஹனீஃபா தொடக்க விழாவில் முன்னிலை வகிக்கிறார்கள்.

மேலும் இவ்விழாவில் பெர்மிம் முன்னாள் தலைவர் டத்தோ டாக்டர் ஹாஜி செய்யது இப்ராஹிம் இலக்கியக் காவலர் விருது பெறுகிறார்.

மலேசியக் கவிஞர் மறைந்த செ. சீனி நைனா முகம்மது பெயரில் நடைபெறும் கவியரங்கங்கிற்கு பெர்மிம் தலைவர் ஷேக் பரிதுத்தீன் அன்வர்தீன், எஸ்எம்எஸ் டீன் குழுமத் தலைவர் ரஃபீக்தீன் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளனர்.

இதில் மலேசியக் கவிஞர் பெருங்குளம் ஹாஜா முகைதீன் 'கெட்ட போர்' எனும் தலைப்பில் கவிதை படைப்பார்.

அதே வேளையில் ஆய்வரங்கத் தொடக்க விழாவில் புரவலர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் வாழ்த்துரை வழங்கவுள்ளார்.

இந்த ஆய்வரங்கிற்கு மிம்கோய்ன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித், பெர்மிம் பேரவையின் சார்பில் கலிருஸ்ஸமான் அமானுல்லா  முன்னிலை வகிக்கவுள்ளார்கள்.

நம் நாட்டின் மூத்த புலவர் பமு அன்வர் பெயரில் மார்க்கம் எனும்  அரங்கமும் நடைபெறவுள்ளது.

மார்க்க அறிஞர் அரங்கத்தில் மலேசியாவின் சொல்லமுது கம்பம் பீர் முஹம்மது பாகவி கருத்துரை வழங்கவுள்ளார்.

மகளிர் அரங்கத்தில் ஆசிரியர் வஹிதா பின்தி இப்ராஹிம் உரை  வழங்கவுள்ளார்.

ஊடக அரங்கத்தில் மலேசிய நம்பிக்கை ஊடக ஆசிரியர் ஃபிதாவுல்லாஹ் கான் கருத்துரை வழங்கவுள்ளார். தீனிசை அரங்கத்தில் மலேசியாவின் ஹுஸைன் பின் ஜமால் முஹம்மத் பாடவுள்ளார்.

இம் மாநாட்டின் உச்சக்கட்டமாக நடைபெறும் நிறைவு விழாவிற்கு டத்தோ ஹாஜி ஜமாருல் கான், ஹாஜி முஹம்மது ஹுசைன், டத்தோ இப்ராஹிம் ஷா, டத்தோ முஹம்மத் சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வழங்கவுள்ளனர்.

அதே வேளையில் டத்தோஸ்ரீ  முஹம்மது இக்பால், டத்தோ வீரா ஷாகுல் தாவூத் ஆகியோருக்கு இலக்கியப் புரவலர் விருது பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset